செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் இளையராஜா 134 படங்களின் பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது | உயர்நீதிமன்றம்

இளையராஜா 134 படங்களின் பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது | உயர்நீதிமன்றம்

1 minutes read

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமை வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவு தொடரும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம், 134 படங்களின் பாடல்களுக்கும் இளையராஜா உரிமை கோர முடியாது என்றும்  டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அன்னக்கிளி, 16 வயதினிலே உள்ளிட்ட திரைப்படங்களின் 134 பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளின் காப்புரிமை தொடர்பாக சரிகமா நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இவ்வழக்கு தொடர்பான மனுவில், சம்பந்தப்பட்ட பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளின் உரிமை சரிகமா நிறுவனத்துக்கே சொந்தமானது என கூறப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தீர்ப்பினை எட்டும் வரை சம்பந்தப்பட்ட பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளை இளையராஜா பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த இடைக்காலத் தடையை ரத்து செய்யுமாறு கோரி இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று (1) டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, தடை உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.