என்னென்ன தேவை?
பச்சை மொச்சை,
சுண்டைக்காய் – தலா 100 கிராம்,
முழு பூண்டு – 1,
சின்னவெங்காயம் – 10,
பொடியாக நறுக்கிய தக்காளி – 2,
புளிக்கரைசல்,
மிளகாய்த்தூள்,
சாம்பார் பொடி,
உப்பு,
நல்லெண்ணெய் – தேவைக்கு,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மொச்சை, சுண்டைக்காய், பூண்டு பல், சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி தக்காளி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி சிறிது நிறம் மாறியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கலக்கவும். நன்கு கொதித்து வந்ததும் கறிவேப்பிலையை தூவி இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.
நன்றி- தினகரன்