மசாலா தூள்

தேவையான பொருட்கள்

தனியா – கால் கப்

ஏலக்காய் – 2 டீஸ்பூன்

கறுப்பு ஏலக்காய் – 3

மிளகு – 2 டீஸ்பூன்

கிராம்பு – 2 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

அன்னாசிப்பூ – 4

ஒரு இன்ச் அளவில் க. பட்டை – 4

பிரியாணி இலை – 2

சிவப்பு மிளகாய் – 4 (காரத்துக்கேற்ப)

சீரகம் – 2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய காய்ந்த வெ.பூண்டு – ஒரு டீஸ்பூன்

சுக்கு – சிறிது (அ) சுக்குப்பொடி – 1 டீஸ்பூன்

சாதிக்காய் – சிறிதளவு

செய்முறை

மேலே சொன்ன பொருட்களை அளந்து எடுத்துக்கொள்ளவும். கறுப்பு ஏலக்காய், சுக்கு, சாதிக்காயை நசுக்கி வைக்கவும். ஒவ்வொன்றாக சிறு தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

நன்றாக சூடு போக ஆற வைக்கவும். ஆறியதும் விரும்பிய பதத்தில் அரைக்கவும். மணமான மசாலா தூள் தயார்.

நன்றி | வீரகேசரி

ஆசிரியர்