பால் ரொட்டி

சுவைப்போம் மகிழ்வோம்

இலங்கை மக்களின் சுவையான பண்டங்களில் ஒன்றாக இருப்பது பால் ரொட்டி ஆகும் விசேட தினங்களில் பால் ரொட்டி கட்டாயம் செய்வது வழக்கம் அத்தகைய சுவையான பால் ரொட்டி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வெள்ளை பச்சை அரிசி 1 கப்

தேங்காய் பால் 1/2 மூடி

தேங்காய் எண்ணெய் 1/2 லிட்டர்

செய்முறை

முதலில் அரிசியை 3-4 மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி நீரை நன்றாக வடித்து எடுத்து கொள்க பின்னர் அதனை நன்றாக இடித்து சலித்துக் கொள்க சலித்து வரும் பதமான கப்பியையும் அந்த மாவுடன் சிறிது சேர்த்து அதை தனியாக வைத்து விட்டு தேங்காயை நன்றாக திருவி அடர்த்தியான பாலை எடுத்து அடுப்பில் வைத்து சிறுது நேரம் குறைந்தளவான நெருப்பு வைத்து சூடாக்குக இப்போது மாவில் சிறிது உப்பு உங்களுக்கு பிடித்தால் சேர்த்து பாலை சிறுது சிறிதாக விட்டு பிசைந்து கொள்க பிசைந்த பின் மாவை தொட்டால் ஒட்டாதவாறு பிசைந்து வைக்க . பின் வட்டமாக தட்டி வைத்துக்கொள்க எண்ணெயை சட்டியில் விட்டு நன்றாக சூடானதும் தட்டி வைத்த மாவை சட்டியில் போட்டு பொறித்துக்கொள்ள வேண்டும் .

இப்போது சுவையான பால் ரொட்டி தயார்.

-N .Dilzka –

ஆசிரியர்