தேவையான பொருள்கள்
கொத்தமல்லி, புதினா- அரை கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
கேரட், முட்டைகோஸ், தலா அரை கிண்ணம் (பொடியாக துருவியது)
வெங்காயம்- அரை கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது- 2 தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் தூள், எண்ணெய்- தேவையான அளவு
கடலை மாவு- 4 மேசைக்கரண்டி
சோயா பீன்ஸ்- 1 கிண்ணம்
செய்முறை
சோயா பீன்ஸை நன்றாக ஊறவைத்து அரைத்து புளிக்க வைக்கவும். மறுநாள் காலை அதனுடன் இஞ்சி, மிளகாய் விழுது, உப்பு, கொத்தமல்லி, புதினா, கேரட், முட்டைகோஸ், வெங்காயம் இவைகளை தனியாக அரைத்து கலந்து வைக்கவும்.
தோசைக்கல் சூடானவுடன் தோசை வார்த்து, அதன் மீது கலந்துவைத்துள்ள காய்கறி கலவையைப் பரவலாகத் தூவி லேசாகக் கரண்டியில் அழுத்திவிடவும். எண்ணெய்விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்தால், சத்தான காய்கறி ஊத்தப்பம் தயார்.