செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மசாலா இல்லாத மட்டன் சுக்கா!

மசாலா இல்லாத மட்டன் சுக்கா!

1 minutes read

வெறுமனே குழம்பு, வறுவல் அல்லாமல் ஒரு சுவையான சுக்கா! விடுமுறை நாட்களில் வீட்டு சமையல் விருப்பமா? மட்டன் வாங்கினீர்களா? இப்போது மசாலா அரைக்காமலே, வீட்டிலுள்ள பொடி மசாலாவைப் பயன்படுத்தி சுவையான மட்டன் சுக்கா செய்வது எப்படி என்று பார்ப்போம். இது ரசம் சாதத்துடன் சேர்த்தாலும் அருமை, சோறு இல்லாமல் சாப்பிட்டாலும் சூப்பர்!

தேவையான பொருட்கள்:

மட்டனை ஊற வைக்க:

மட்டன் – ½ கிலோ

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மல்லித் தூள் – 2 ஸ்பூன்

சீரகத் தூள் – ½ ஸ்பூன்

சோம்புத் தூள் – ½ ஸ்பூன்

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

மிளகுத் தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தயிர் – 1½ டேபிள்ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

பட்டை – 3 துண்டுகள்

கிராம்பு – 4

அன்னாசிப்பூ – 1

சோம்பு – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கி)

கறிவேப்பிலை – 1 கொத்து

தக்காளி – 1 (நறுக்கி)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் – 200 மில்லி

கொத்தமல்லி – சிறிது

எளிய செய்முறை:

மட்டனை நன்கு கழுவி, அனைத்து மசாலா பொடிகள், தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, குறைந்தது 30 நிமிடம் ஊற விடவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு தாளிக்கவும்.

வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

ஊற வைத்த மட்டனை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, 200 மிலி தண்ணீர் சேர்த்து கிளறி, 5–6 விசில் விட்டு வேக விடவும்.

குக்கர் திறந்ததும், ஒரு வாணலியில் அந்த மாட்டனை ஊற்றி, நீர் காய்ச்சி வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

அம்மா ஸ்டைலில், சிக்கனாக செய்ய வேண்டிய மட்டன் சுக்கா ரெசிபி இது தான்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.