இட்லி, தோசை, சாதம் – எதற்கும் செம்ம செட்டாகும் இந்த 🌶️ சட்னி, வீட்டிலே ஒரு தடவை செய்துப் பாருங்க!
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – ¼ கிலோ
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு (கரைத்து வைக்கவும்)
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை – 1 கொத்து
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
கருப்பு எள் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கத்திரிக்காயை நீளமாக நறுக்கி தண்ணீரில் ஊறவைக்கவும்.
சீரகத்தை லேசாக வறுத்து வைக்கவும். அதேபோல் எள்ளையும் வறுத்து, இரண்டையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, பின்னர் தக்காளி சேர்த்து மெலிந்துவரும் வரை வதக்கவும்.
கத்திரிக்காயை சேர்த்து மூடி வைத்து 2 நிமிடம் வேகவிடவும்.
மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
பச்சை வாசனை போனதும் கரைத்து வைத்த புளி சேர்த்து கொதிக்கவிடவும்.
சட்னி சற்று கெட்டியாகியதும் அரைத்த எள்–சீரக பேஸ்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
மேலே கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்.
✨ சூடான இட்லி, தோசை, சாதம் – எதோட சேர்த்தாலும் அட்டகாசம்!