செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கோதுமையும் வெங்காயமும் இருந்தாலே போதும்!

கோதுமையும் வெங்காயமும் இருந்தாலே போதும்!

1 minutes read

சாப்பாட்டுக்கு எப்போதும் ஒரே மாதிரியான டிபன்களால் சலிப்பா? எந்த சைடு டிஷ் இல்லாமலே சுவையாக சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி இதோ!

கோதுமை மாவும், வெங்காயமும் இருந்தாலே போதும் 🥙 வெங்காய ஸ்டஃப்டு பராத்தா செய்து சுவையுங்கள். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

மாவுக்காக

கோதுமை மாவு – 2 கப்

உப்பு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

உப்பு – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ½ டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்

கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயத் தூள் – ½ டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

எள்ளு விதைகள் – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், கடலை மாவு, பெருங்காயம், கொத்தமல்லி, எள்ளு சேர்த்து நீர் இல்லாமல் நன்கு பிசைந்து கொள்ளவும்.

ஊறிய மாவை 6 உருண்டைகளாகப் பிரிக்கவும். இரண்டு உருண்டைகளை சதுரமாகத் தேய்த்து, ஒன்றின் மேல் வெங்காய கலவையை பரப்பவும். அதன் மேல் மற்றொரு தேய்த்த சப்பாத்தியை வைத்து ஓரங்களை அழுத்தி மூடவும்.

அதை நான்கு பாகங்களாக வெட்டி, ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி, உருட்டி தட்டையாகத் தேய்க்கவும்.

சூடான தோசைக்கல்லில் வைத்து, எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் பொன்னிறமாக வேகவிடவும்.

👉 சுவையான வெங்காய ஸ்டஃப்டு பராத்தா ரெடி!
இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது தயிருடன் சேர்த்தும் சுவைக்கலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.