செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ஹோட்டல் ஸ்டைலில் ரவா உப்புமா!

ஹோட்டல் ஸ்டைலில் ரவா உப்புமா!

2 minutes read

தினமும் இட்லி, தோசை போன்ற ஒரே மாதிரியான காலை உணவுகளை சாப்பிட்டு சலித்துவிட்டதா? அப்படியானால், அவ்வப்போது சுவையான உப்புமாவையும் செய்து சாப்பிடலாம். ஆனால் உங்கள் வீட்டில் உப்புமா என்றாலே முகம் சுளிப்பவர்களா? அப்படியானால் அவர்களுக்காக ஹோட்டல் ஸ்டைலில் ரவா உப்புமா செய்து கொடுத்து பாருங்கள். அதன் மென்மையும் சுவையும் அனைவரையும் கவர்ந்து விடும்.

பொதுவாக ஹோட்டல்களில் கிடைக்கும் ரவா உப்புமா பஞ்சு போல மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும். அதற்கான முக்கிய ரகசியம் சரியான அளவு தண்ணீர் மற்றும் சமைக்கும் முறையில்தான் இருக்கிறது. சரியான பக்குவத்தில் செய்தால், உப்புமா பிடிக்காதவர்களுக்குக் கூட இது மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும்.

மேலும், இந்த ஹோட்டல் ஸ்டைல் ரவா உப்புமா செய்வது மிகவும் எளிது. காலை நேரத்தில் விரைவாக செய்து முடிக்கக்கூடிய இந்த ரெசிபி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

இந்த சுவையான ஹோட்டல் ஸ்டைல் ரவா உப்புமாவை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து வீட்டிலேயே செய்து சுவைத்திடுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் – 3 1/2 கப்
* எண்ணெய் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 3/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு – 1 1/4 டீஸ்பூன்
* முந்திரி – 6 (உடைத்தது)
* கறிவேப்பிலை – 1 கொத்து
* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* ரவை – 1 கப்
* மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
* கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி – தேவையான அளவு (வேக வைத்தது)
* தக்காளி – 1 (நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* வாங்கிபாத் பவுடர் – 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் – 1/4 கப்
* நெய் – 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 1/2 கப் நீரை ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு உப்புமாவிற்கு தேவையான அளவு கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நீரை ஊற்றி காய்கறிகளை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் உடைத்த முந்திரியை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் ரவையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் மற்றொரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், வேக வைத்த காய்கறிகள், நறுக்கிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு மேலே வாங்கிபாத் பவுடரை தூவி, 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் துருவிய தேங்காய், 1 1/2 டீஸ்பூன் நெய் மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் ரவா கிச்சடி/காரா பாத் தயார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.