செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு மின்சாரம், எரிவாயு கட்டணங்கள் ஏப்ரல் முதல் குறையும்: வாழ்க்கைச் செலவை குறைக்க அரசாங்கம் தயார்

மின்சாரம், எரிவாயு கட்டணங்கள் ஏப்ரல் முதல் குறையும்: வாழ்க்கைச் செலவை குறைக்க அரசாங்கம் தயார்

1 minutes read

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள இலட்சக்கணக்கான வீடுகளுக்கான எரிசக்தி கட்டணங்கள் (Energy bills) எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் சுமார் 7% குறைய உள்ளதாக எரிசக்தி ஒழுங்குமுறை அமைப்பான Ofgem அறிவித்துள்ளது.

ஒரு சராசரி குடும்பத்தின் ஆண்டு எரிசக்தி கட்டணம் £117 குறைந்து, £1,641ஆக மாறும். இது மாதத்திற்கு சுமார் £10 சேமிப்பைத் தரும்.

சான்சலர் ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த கொள்கை மாற்றங்களின்படி, ‘Eco’ திட்டம் இரத்து செய்யப்பட்டு, சில கட்டணங்கள் பொது வரிவிதிப்புக்கு மாற்றப்பட்டதால், இந்த விலை குறைப்பு சாத்தியமாகியுள்ளது.

மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை சுமார் 11% குறையும். ஆனால், எரிவாயுவின் (Gas) விலை 3% மட்டுமே குறையும். இதனால் அதிக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் அதிக பலன் பெறுவார்கள்.

அதே நேரத்தில், மின்சார விநியோகக் கட்டமைப்பைப் பராமரிக்கும் செலவு அதிகரிப்பதால், முழுமையான பலன் மக்களுக்குக் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் மாதத்தில் குடிநீர் கட்டணம் மற்றும் உள்ளூராட்சி வரி போன்ற இதர செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவு நெருக்கடி தொடர வாய்ப்புள்ளது.

பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளார். மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கத் தனது அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இருப்பினும், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி இதனை விமர்சித்துள்ளது. அரசாங்கம் எரிசக்தி கட்டணத்தைக் குறைத்துக் காட்டிவிட்டு, அந்தப் பணத்தை வரி மூலம் மக்களிடமே வசூலிக்கிறது என்று நிழல் எரிசக்தி செயலாளர் கிளாரி கவுடின்ஹோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது எரிசக்தி விலைகள் உக்ரைன் போருக்கு முந்தைய நிலையை விட இன்னும் ஒரு பங்கு அதிகமாகவே உள்ளன. இதனால் மக்கள் தங்களின் எரிசக்தி பயன்பாட்டைக் கண்காணித்து, சிக்கனமாக இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

uk biill info Grc

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.