செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்..

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்..

1 minutes read

இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோருக்கு பொதுவான பிரச்சனை ஒன்றே அது தூக்கம் குறைவு. சிலர் தூக்கம் வராமல் தவிப்பார்கள்; சிலர் இரவு பலமுறை விழிப்பார்கள்; மற்றவர்கள், எவ்வளவு தூங்கினாலும் ஓய்வாகவே இல்லை எனக் கூறுவார்கள். ஆழமான, நிம்மதியான தூக்கம் கிடைப்பதா என்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.

அத்தகைய தூக்கத்துக்குத் தேவையானது சில இயற்கை பழங்கள். இவை ஹார்மோன்கள் சுரப்பை தூண்டுவதுடன், நரம்பு அமைப்பையும் சீர்படுத்தும்.

1. புளிப்பு செர்ரி – இதில் மெலடோனின் அதிகம் உள்ளதால் தூக்கத்தின் தரத்தை உயர்த்துகிறது. செர்ரி சாறு குடிப்பதும் பயனளிக்கலாம்.

2. கிவி – இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் இரண்டு கிவி பழங்களை சாப்பிடுவது நன்றாகச் செயல்படும். இதில் செரோடோனின் உள்ளதால் தூக்கத்திற்கு உதவுகிறது.

3. அன்னாசி – மெலடோனின் சுரப்பை தூண்டி, தூங்கும் நேரத்தை விரைவுபடுத்துகிறது.

4. வாழைப்பழம் – பொட்டாசியம், மக்னீசியம், ட்ரிப்டோபன் ஆகியவை உள்ளதால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு தூக்கம் வந்துவிடும்.

5. ஆப்பிள் – மெலடோனின் மற்றும் மெக்னீசியம் உள்ளதால் நரம்புகளை சீர்செய்யும். சிலருக்கு இது தூக்கத்திற்கு உதவலாம்.

இவை மட்டும் போதாது. தூங்கும் முன் மனதை அமைதியாக்கவும், கனமான உணவு, காபி, மது தவிர்க்கவும் வேண்டும். எதுவும் பயனளிக்கவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More