செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு இதை பயன்படுத்துங்க…

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு இதை பயன்படுத்துங்க…

1 minutes read

நம் முகத்தை அழகாக்க மேக்கப் என்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி நம் உதட்டை அழகாக்க லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டு சாயங்களும் அவசியம். லிப்ஸ்டிக்கை நீங்கள் சரியாக தேர்ந்தெடுத்து ‘அப்ளே’ செய்தாலே முகமானது அழகாக மாறி விடும். ஆனால் நம்மில் நிறைய பேர் தங்கள் உதடுக்கு ஏற்ற உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பதில்லை. அதுமட்டுமின்றி, உதட்டு சாயம் பூசுவதிலும் பல்வேறு தவறுகளையும் செய்கிறார்கள். அதில் சிலவற்றை தெரிந்து கொள்வதுடன், அதை திருத்தி கொள்ள முயல்வோம்.

லிப்ஸ்டிக்

சிலர் தங்கள் உதடுகள் ஆடம்பரமாக இருக்க விலையுயர்ந்த உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பது உண்டு. ஆனால் விலையுயர்ந்த உதட்டு சாயங்களை விட தரமான உதட்டு சாயம்தான் உங்களுக்கு அவசியம். சில வகை உதட்டு சாயங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் உங்கள் உதட்டை கருப்பாக மாற்றவும், விரிசலை உண்டாக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே உதட்டின் நிறத்தை மாற்றாத அதே நேரத்தில் மென்மையான உதட்டை பராமரிக்கக்கூடிய உதட்டு சாயங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஈரப்பதம்

உங்கள் உதடுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான முதல் விஷயம் உதடுகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உதடுகளில் உள்ள கருமையை போக்க முடியும். எனவே முதலில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு உதடுகளை ஈரப்பதமாக்க இயற்கையான லிப் பாம் பயன்படுத்துங்கள். இதற்கு தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை லிப் பாமைக் கூட பயன்படுத்தலாம். இதனால் உங்கள் உதடுகள் வறண்டு போகாமல் பிளவுகள் இல்லாமல் இருக்கும்.

லிப்ஸ்டிக்கின் தரம்

ரசாயனம் சார்ந்த உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இயற்கையான உதட்டு சாயங்களை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் ரசாயனம் நிறைந்த உதட்டு சாயங்கள் அழற்சியை உண்டாக்கலாம். அவை உதடுகளை சீக்கிரமே கருப்பாக்கி விடும்.

தேன் லிப் பேக்

உதட்டு சாயங்களை பூசுவதனால் சிலருக்கு உதடுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை தேன் மூலமாகவே குணமாக்கலாம். தேனை உதட்டில் வாரத்திற்கு இரண்டு முறை தடவுவதினால், உதடுகளில் உள்ள விரிசலை குணப்படுத்த முடியும். தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதடுகளில் உள்ள வீக்கம் போன்றவற்றை போக்குகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More