June 2, 2023 1:38 pm

மட்டக்களப்பில் கவிக்கூடல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எதிர்வரும் 21/03/2023 திகதி ‘கவிக்கூடல்’ நிகழ்வை மாவட்ட பண்பாட்டலுவலகமும், மட்/பொதுநூலகமும் இணைந்து நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே தங்கள் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கவிஞர்களை (புதுக்கவிஞர்கள்,மரபுக்கவிஞர்கள்) பங்குபெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கவிதைகள் புதுக்கவிதையாயின் 12 வரிக்குள் உட்பட்டதாகவும், மரபுக்கவிதையாயின் எட்டடிகொண்ட ஒரு அடிக்கவிதையும்(8 வரிமாத்திரம்) நான்கடியாயின் இரண்டு அடி கொண்டதாக கவிதைகள் அமையவேண்டும். கருப்பொருள் வானமே எல்லை எதுசார்ந்ததாகவும் கவிதை அமையலாம்.ஆனால் அரசவிரோதக் கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

கவிதைகள் 17/03/2023 முன் எனது வட்சப்(0776084756) இலக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறுகேட்டுக்கொள்கின்றேன். ** கவிதைகளின் தரம் கவனத்தில் எடுக்கப்படும். 21/03/2023 நடைபெறும் நிகழ்வில் உரிய கவிஞரே கவிதையை வாசிக்கவேண்டும்.

த.மலர்ச்செல்வன்
மாவட்ட கலாசார இணைப்பாளர்
மாவட்டக்காரியாலயம்
மட்டக்களப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்