அவுஸ்ரேலிய அமைப்பின் விருது பெற்ற தீபச்செல்வன்

அன்னைவழி அன்புவழி பன்னாட்டு சேவை அமைப்பின் அகில உலக தமிழ் முழகத்தின் வையத் தமிழ் திருநாள் இரண்டாம் நாள் நிகழ்வில் ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவை தளமாக கொண்ட பன்னாட்டு அமைப்பு 21 நாட்கள் நடைபெறும் நிகழ்வில் உலகம் எங்கும் வாழும் பல்வேறு கலைஞர்கள, தொண்டர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் தமிழை வளர்க்கும் நோக்கில் பல போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந் நிகழ்வை பச்சைவதி என்று அழைக்கப்படும் டாக்டர் மாலினி ஆனந்தகிருஷ்ணன் நிர்வகித்து வருகின்றார்.

ஆசிரியர்