March 31, 2023 6:41 am

பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீட்டின் சுவர்களில்
புகைப்படங்கள் இல்லை
தெருக்களில் சிலைகள் இல்லை
பள்ளிப் புத்தங்களிலும்
மறைக்கப்பட்டது பெயர்

படை நடத்தி
வெற்றிகள் நிறைத்த மண்ணில்
எந்த தடயமும் இல்லை

உமைப் பற்றியெந்த காவியமும் இல்லை
உம் பெயர் போலொரு காவியமும் இல்லை

உம் பெயரை உச்சரிக்க
தடை செய்யப்பட்ட காலத்தில்
பெயரே வரலாறு
நிகரற்ற சித்திரம்
கர்ஜிக்கும் அடையாளம்
நம்மை சூழும் காவல்
பகைவர் அஞ்சும் ஆயுதம்
மனங்களில் ஒலிக்கும் பெருங்குரல்
நம் நிலத்தே அதிரும் வீரநடை
வானில் அசையும் கொடி
இதயங்களில் சுடரும் ஒளி

காலத்தை சூழற்றும்
உம் மந்திரப்புன்னகை

மொழியினிற் சுமப்பது
தேசத்தை மட்டுமல்ல
நம் தலைவனையும்தான்.

தீபச்செல்வன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்