செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் இலகு பாட்டி வைத்தியம்

இலகு பாட்டி வைத்தியம்

1 minutes read

வலிப்பு நோய்

தினந்தோறும் அரை டம்ளர் ஆப்பிள் பழத்தின் சாற்றையும், அரை டம்ளர் அத்திப்பழத்தின் சாற்றையும் கலந்து குடிக்க வேண்டும் இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து பருகி வர வலிப்பு நோய் நீங்கும்.

வெட்டை நோய் அகல

செம்பருத்திப் பூவை காலையில் மூன்று வீதம் பத்து தினங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் ஆண், பெண் இருவரையும் பீடித்த வெட்டை நோய் அகலும்.

குதிகால் வாதவலி குணமாக

எருக்கை இலைகளை ஒரு சட்டியில் போட்டு அதனுடன் காடியைச் (விளிகர்) சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். அதைக்கொண்டு குதிகாவிக் ஒத்தடம் கொடுத்துவர குதிகால் வலி மறைந்துவிடும்.

இரத்த பேதி

கடுக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு இம்மூன்றையும் தனித் தனியே வகைக்கு அரை ரூபாய் எடை எடுத்துக்கொள்ளவும். இளம் வறுப்பாக வறுத்து பட்டுப்போல் தூள் செய்து கொள்ளவும். தினமும் காலை மாலை அரைத் தேக்கரண்டி அளவு வீதம் இத்தூளுடன் சிறிது நெய்யைச் சேர்த்து மூன்று நாட்கள் உண்டுவர இரத்தமாகப் போகும் இரத்த பேதி குணமாகும்.

சீத பேதி

அரை ரூபாய் எடை அளவுக்கு கசகசாவை எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைக்க வேண்டும். பின்பு சர்க்கரையை அரைத்து கசகசாவுடன் குழப்பி வைத்துக்கொண்டு காலை, பகல், மாலை என மூன்று நாட்களுக்கு உண்டுவர சீதபேதி நோய் குணமாகும். இந்த மருந்தை உண்ணும் வேளைகளில் காரத்தை விலக்கி உண்பது அவசியம்.

உடலில் உண்டாகும் வீக்கங்கள்

உடலில் அடிபடுவதால் உண்டாகும் வீக்கங்களுக்கும், வாத நோயால் உருவாகும் வீக்கங்களுக்கும், பீஜம் சம்பந்தமான விக்கங்களுக்கும் பின்வரும் சிகிச்சை செய்யலாம்.

அதிக உப்பு போட்டுக் காய்ச்சிய வெந்நீரால் பகலில் அடிக்கடியும், இரவில் படுக்கைக்குச்செல்லும் முன்பும், காலையில் எழுந்ததும் ஒத்தடம் கொடுத்து வந்தால் அந்த வீக்கங்கள் யாவும் சுகமாகும். கடல்நீரை கொதிக்க வைத்தும் ஒத்தடம் கொடுக்கலாம்.

நன்றி தினசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.