தேசிய மருத்துவ நூலகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, தேனில் அஸ்கார்பிக் அமிலம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற விட்டமின்கள் மற்றும் கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சிறப்பு தாதுக்கள் நிறைந்துள்ளன.
மேலும், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் தாவர கலவைகள் உள்ளன. தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், செல் சேதத்தை உண்டாக்கும் ஆர்ஓஎஸ்-ஸை உடலில் நடுநிலையில் வைக்க உதவுகிறது.