உலகச் சுகாதார நிறுவனம் (WHO) உடல் பருமனை கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. இதில், நீண்டகால எடைக்குறைக்கும் சிகிச்சைக்காக GLP-1 வகை மருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் இந்த GLP-1 மருந்துகள், இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்துவதோடு பசியை குறைத்து எடை மேலாண்மைக்கும் உதவுகின்றன. இந்த மருந்துகள் பொதுவாக ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன.
WHOவின் புதிய பரிந்துரையில், ஆரோக்கியமான உணவு மற்றும் ஒழுங்கையான உடற்பயிற்சியுடன் சேர்ந்து இந்த மருந்துகளும் உதவிக்கரமாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, இதுவரை வாழ்க்கைமுறை மாற்றங்களையே முதன்மை தீர்வாகக் கருதியிருந்த WHOவின் கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றமாகும்.
ஆயினும், எடைக் குறைக்கும் எந்த மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம் என்பதையும் WHO வலியுறுத்துகிறது.