செஸ் ஆனந்துக்கு வெண்கலப்பதக்கம்செஸ் ஆனந்துக்கு வெண்கலப்பதக்கம்

உலக ரேபிட் (அதி விரைவு) செஸ் போட்டி துபாயில் நடந்தது. 15 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் கடைசி சுற்று ஆட்டத்தில் கடந்த ஆண்டு ஆனந்தை வீழ்த்தி உலக செஸ் பட்டத்தை வென்ற மாக்னஸ் கார்ல்சென், 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்தை எதிர்கொண்டார். இதில் ஆனந்த், கார்ல்சென்னை வீழ்த்தினார். இருப்பினும் 15 சுற்றுகள் முடிவில் 11 புள்ளிகள் பெற்ற கார்ல்சென் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இந்த போட்டியில் 8 வெற்றி, 6 டிரா கண்ட கார்ல்சென், ஆனந்திடம் மட்டுமே தோல்வியை சந்தித்தார். இத்தாலி வீரர் பாபியனோ கருணா, இந்திய வீரர் ஆனந்த், லெவோன் அரோனியன் (அர்மேனியா), அலெக்சாண்டர் மொரோவிச் (ரஷியா) ஆகியோர் 10.5 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர்.

விகிதாச்சார அடிப்படையில் கருணா வெள்ளிப்பதக்கமும், ஆனந்த் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

ஆசிரியர்