வாரத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் ‘பாக்கெட் மணி’ பிரித்தானிய சிறுமிவாரத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் ‘பாக்கெட் மணி’ பிரித்தானிய சிறுமி

தனிக் குதிரை, ஐபேட், பிரபல நிறுவனங்களின் ஆடைகள், கைப்பைகள், விதம், விதமான விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால், பிரிட்டனை சேர்ந்த, 12 வயது சிறுமி, உலகளவில் பிரபலமடைந்துள்ளார். பிரிட்டனில் வசிக்கும், சேஸ் மெக்கெனா, 12. பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் வசிக்கும் சேஸ், தான் விரும்புவதை ஒரு முறை கூறினால் போதும், உடனே கிடைத்துவிடும். ஆண்டுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரை, பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் உடைகள், கைப்பைகள் மற்றும் பொம்மைகள் வாங்குவதற்காக, இந்த சிறுமி செலவு செய்கிறார். இவருக்கு வாரத்திற்கு, 30 ஆயிரம் ரூபாய், ‘பாக்கெட் மணி’யாக அவரது பெற்றோர் தருகின்றனர். இவரிடம் உள்ள, விலையுயர்ந்த பரிசுப் பொருட்களில், குதிரையும் ஒன்று. சேஸ்சிடம், 41 ஆயிரம் பொம்மை பைக்குகள் உள்ளன.

Click Here

 

ஆசிரியர்