இளவரசர் வில்லியமுக்கு சொகுசு ஹெலிகாப்டர் பரிசு வழங்கிய ராணி எலிசபெத்இளவரசர் வில்லியமுக்கு சொகுசு ஹெலிகாப்டர் பரிசு வழங்கிய ராணி எலிசபெத்

பிறந்த நாள் பரிசாக இளவரசர் வில்லியமுக்கு ராணி எலிசபெத் சொகுசு ஹெலிகாபடர் வழங்கினார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்– டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி கேத்மிடில்டன். இவர்களுக்கு இளவரசர் ஜார்ஜ் என்ற மகன் இருக்கிறான்.

இந்த நிலையில் இளவரசர் வில்லியம் நேற்று தனது 32–வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பாட்டி ராணி எலிசபெத் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அத்துடன் ஹெலிகாப்டர் ஒன்றையும் பரிசளித்தார். ‘அகுஸ்டா ஏ 109 எஸ்’ என்ற அந்த ஹெலிகாப்டர் அதிநவீன வசதிகளுடன் சொகுசு வாய்ந்தது.

மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் பறக்க கூடியது. இந்த ஹெலிகாப்டரில் இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேத் மிடில்டனும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு அவர்கள் வேகமாக வீடு திரும்பி இளவரசர் ஜார்ஜுடன் அதிக நேரம் பொழுதை கழிக்க வசதியாக இதை ராணி எலிசபெத் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் தேவைப்படும் நேரங்களில் இந்த ஹெலிகாப்டரில் அரச குடும்பத்தினரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இளவரசர் வில்லியம் ‘ஆர்.ஏ.எப்.‘‘ ரக ஹெலிகாப்டரின் விமானி ஆக உள்ளார். எனவே அவரால் இந்த ஹெலி காப்டரை ஒட்ட முடியும்.

ஆசிரியர்