அமெரிக்காவின் அலெசியன் தீவில் நிலநடுக்கம்அமெரிக்காவின் அலெசியன் தீவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பசிபிக் கடல் பிராந்தியத்தில் அலெசியன் தீவுகள் உள்ளது. அங்கு நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்கு வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அச்சம் அடைந்த பொது மக்கள் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

அங்கு 8 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அலேசியன் தீவுகளில் உள்ள லிட்டின் சிட்கின் தீவின் தென்கிழக்கில் 23 கி.மீட்டர் தொலைவில் 114 கி.மீட்டர் ஆழத்தில் பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்டது.

இதனால், வழக்கத்துக்கு மாறாக பசிபிக் கடலில் உயரமான அலைகள் எழும்பின. அதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவின் பசிபிக் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது, பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர்