இயக்குநர் ராம நாரயணன் மறைவு – படப்பிடிப்புகள் ரத்துஇயக்குநர் ராம நாரயணன் மறைவு – படப்பிடிப்புகள் ரத்து

 

மறைந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம நாராயணனின் உடலுக்கு ஏராளமான தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். உலகளவில் அதிக படங்களை இயக்கி சாதனை படைத்த இயக்குநர் என்ற பெருமை பெற்றவர் ராம நாரயணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகளில் இதுவரை 126 படங்கள் இயக்கியுள்ளார். கடைசியாக தமிழில் ஆர்யா சூர்யா என்ற படத்தை இயக்கினார். சீறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்த ராம நாராயணன், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி ஜூன் 22ம் தேதி காலமானார்.
இதனையடுத்து அவரது உடல் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டு, பின்னர் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. திமுக., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், திரையுலகினர் கமல், விஜயகாந்த், சரத்குமார், இளையராஜா, கவுண்டமணி, சங்கர் கணேஷ், ஏ.வி.எம்.சரவணன், பேரரசு, ஆர்.கே., கே.முரளிதரன், பவர்ஸ்டார் சீனிவாசன், அருள்நிதி, சிவக்குமார், பிரமிட் நடராஜன், ராதாரவி, ராதிகா, உதயநிதி ஸ்டாலின், அர்ஜூன், அபிராமி ராமநாதன், செந்தில், ரமேஷ் கிருஷ்ணா, கேயார், குஷ்பூ, சுந்தர்.சி, பாரதிராஜா, பாண்டியராஜன், போஸ் வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், மயில்சாமி, பெப்சி விஜயன், அமீர், எடிட்டர் மோகன், நாசர், கே.ராஜன், கோவை சரளா, எஸ்.பி.முத்துராமன், டி.ராஜேந்தர், சசிகுமார், ஆர்.பி.சவுத்ரி, ஆர்.சுந்தர்ராஜன், கானா உலகநாதன், ராமராஜன், கஞ்சா கருப்பு, சித்ரா லட்சுமணன், உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
படப்பிடிப்புகள் ரத்து
ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர்