March 24, 2023 3:19 am

முதலீட்டாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த. சீனாவை வீழ்த்திய அமெரிக்காமுதலீட்டாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த. சீனாவை வீழ்த்திய அமெரிக்கா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தனது ஆட்சியில் முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் நாடாக அமெரிக்கா உருவாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் இது குறித்து அவர் மேலும் பேசியது: நான் அமெரிக்க அதிபர் ஆனபோதும் முதலீட்டுக்கும், தொழில் செய்வதற்கும் ஏற்ற நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்கா அந்த இடத்தைப் பெற்றுள்ளது.

பொருளாதார மந்தநிலையில் இருந்து அமெரிக்கா வேகமாக முன்னேறியுள்ளது. அதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். தொழில் வளம் மிகுந்த போட்டி நாடுகளைவிட அமெரிக்க வேகமாக முன்னேறியுள்ளது. பொருளாதாரச் சிக்கலில் இருந்தும் விரைவில் விடுபட்டு வளர்ச்சிப் பாதையை எட்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகை யில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அளவுக்கு இணை யாக உள்நாட்டிலேயே எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

நான் அதிபராகப் பொறுப் பேற்றபோது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி கண்டி ருந்தது. ஆனால் இப்போது எரி சக்தி உற்பத்தியை இரு மடங்காக் கியுள்ளோம். காற்றாலை மின்னுற் பத்தி மூன்று மடங்காகியுள்ளது. சூரிய மின் சக்தி உற்பத்தி 10 மடங்காக அதிகரித்துள்ளது. கார்பன் மூலம் ஏற்படும் மாசு பாட்டை குறைத்துள்ளோம். தொழில்வளம் மிக்க நாடு ஒன்றில் கார்பன் மாசுபட்டை குறைப்பது மிகப்பெரிய சாதனை.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்