இலங்கை அகதிகள் 157 பேரையும் விசாரணைக்காக கோகோஸ் தீவுக்கு மாற்ற ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல் இலங்கை அகதிகள் 157 பேரையும் விசாரணைக்காக கோகோஸ் தீவுக்கு மாற்ற ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல்

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வர முயன்றதாக நடுக்கடலில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி முதல் அந்நாட்டு சுங்கத் துறைக் கப்பலில் காவலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் 157 பேரையும் விசாரணைக்காக கோகோஸ் தீவுக்கு மாற்ற ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உரிய விசா, ஆவணங்களின்றி இந்தியாவில் இருந்து வந்த அனைவரையும் ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரக்கூடாது என்று அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை அகதிகளை மீண்டும் அவர்கள் தாயகத்துக்குத் திருப்பி அனுப்ப இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அந்த வழக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனால், நடுக்கடலில் ஆஸ்திரேலிய சுங்கத் துறை கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள அகதிகளின் நிலை கேள்விக்குரியானது.

அத்தீவில் ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், அவர்களில் யார் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள், யார் இலங்கை அகதிகள் என்பது குறித்து கேன்பராவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர்.

ஆசிரியர்