வடக்கு பசிபிக் பெருங்கடலில், கடந்த வாரம் தோன்றிய, ‘மத்மோ’ சூறாவளி புயல், இன்னும் குறையாமல், சீனாவின் கிழக்கு மாகாணங்களை கடுமையாக தாக்கி, பலத்த பொருட்சேதத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த வாரம் தோன்றிய, ‘ரம்மாசன்’ சூறாவளியின் பாதிப்பிலிருந்து, சீனாவின் கிழக்கு பகுதி மாகாணங்கள் முழுவதும் மீளாத நிலையில், அந்தப் பகுதி, மத்மோ சூறாவளியால் பாதிக்கப் பட்டது. ரம்மாசன், இதுவரை, 77 உயிர்களை பலி வாங்கிய நிலையில், மத்மோ, நேற்று, 13 பேரை கொன்றது.இந்தியாவின் அண்டை நாடான சீனாவில், இந்த ஆண்டில் மட்டும், 10 மிகப் பெரிய சூறாவளி புயல்கள் தாக்கியுள்ளன.
