போர் நிறுத்தத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

ரம்ஜான் திருநாளை கொண்டாடும் விதமாகவும், காஸா   பகுதியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாகவும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப்பகுதியில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

காஸா  விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு கூடிய ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அரபு நாடுகளின் உதவியுடன், ஜோர்டானால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தில், உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு பலமான ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அனைத்து தரப்பினரும் இதை ஏற்கவும், நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆசிரியர்