தொடரும் தமிழக மீனவர்கள் கைது தொடரும் தமிழக மீனவர்கள் கைது

மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் இன்று பிடித்து சென்றனர். அவர்கள் பயணித்த படகுககளும், மீன்களும் பறிமுதல் செய்ப்பட்டன.

எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என தமிழக முதல்வர் ஜெ., பிரதமருக்கு சமீபத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் 50 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஒரு வாரத்தில் மீன் பிடிக்க சென்று திரும்புகையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. 6 படகுகளில் சென்றதாகவும், இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் மாவட்ட போலீஸ் இலாக்கா வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆசிரியர்