சனிக் கிரகத்தின் வெந்நீர் ஊற்றுகள் கண்டுபிடிப்பு சனிக் கிரகத்தின் வெந்நீர் ஊற்றுகள் கண்டுபிடிப்பு

நாசாவின் காஸினி விண்கலம், சனிக் கிரகத்தின் பனி நிலாவான என்சிலேடஸில் 101 தனித்துவ வெந்நீர் ஊற்றுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

அந்த நிலாவின் அடிநிலப்பகுதியில் இருந்து திரவ நிலை நீர் மேலே வந்திருப்பதற்கான சாத்தியக் கூறு இருப்பதாக இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காஸினியின் கேமரா, இந்தச் சிறிய நிலாவின் தெற்கு முனைப் பகுதியில் படங்களை எடுத்து ஆராய்ந்து வருகின்றது.

காஸினி ஹைஜன் மிஷன், நாஸா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் இத்தாலி விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆராய்சித் திட்டம்.

ஆசிரியர்