கடும் புயல் விமானங்கள் தரையிறக்கம் தென் கொரியாவில் கடும் புயல் விமானங்கள் தரையிறக்கம் தென் கொரியாவில்

தென்கொரியாவின் தெற்கு பிராந்தியங்களில் இன்று கடுமையான புயல் தாக்கியது. மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கூரைகள், ஜன்னல் கதவுகள் கடுமையாக சேதமடைந்தன. போக்குவரத்து சிக்னல்கள் உடைந்து விழுந்தன. தெருக்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஜேஜூ தீவில் புயலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அங்கிருந்து இயக்கப்படும் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தப்பட்டன. அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த வார துவக்கத்தில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்