நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக இங்கிலாந்தில் ஆய்வுநாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக இங்கிலாந்தில் ஆய்வு

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்கிய நிலையில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கின்றது.

ஆண்டுதோறும் சுமார் 1500 பிறந்த குழந்தைகளிடையே இந்த தாக்கம் காணப்படுவதாகவும், கருவுற்ற நிலையில் இந்த குழந்தைகளின் தாய்கள் ஹெராயின், கொக்கைய்ன் போன்ற கொடிய போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்ததால், எந்தப் பாவமும் அறியாத அப்பாவி குழந்தைகளின் ரத்தத்திலும் இந்த போதைப் பழக்கம் பரவி விடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

பெண்களின் கொடிய போதைப் பழக்கம் அவர்களை மட்டுமின்றி, அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகள், குடும்பம், உறவினர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாழ்படுத்தி விடுவதாக அந்த ஆய்வுக் குறிப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்