20-வது காமன்வெல்த் போட்டி நிறைவு20-வது காமன்வெல்த் போட்டி நிறைவு

கிளாஸ்கோவில் கடந்த 12 நாள்களாக நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் முடிவுக்கு வந்தன.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் போட்டிகளில் இங்கிலாந்து 171 பதக்கங்களுடன் முதலிடத்தையும், ஆஸ்திரேலியா 135 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கனடா 82 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டிகளை நடத்திய ஸ்காட்லாந்து நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா 64 பதக்கங்களை வென்று 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில், 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம். இந்தியாவில் இருந்து மொத்தம் 215 வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.

ஆசிரியர்