குடல் புற்றுநோயை தடுக்கும் சக்தி கருப்பு மிளகுக்குகுடல் புற்றுநோயை தடுக்கும் சக்தி கருப்பு மிளகுக்கு

உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டு மல்லாமல், புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுப்பதிலும், கருப்பு மிளகு பெரும் பங்கு வகிப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதுகுறித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான்டியாகோ மருத்துவ பள்ளியை சேர்ந்த பேராசிரியர், அயால் ராஜ் கூறியதாவது:

கருப்பு மிளகில், வீரியமிக்க, ‘கெப்செசின்’ உள்ளது. இது, குடல் புற்றுநோயை தடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. பெருங்குடல் சுவர்களில் காணப்படும் செல்கள், ‘டி.ஆர்.பி.,’ என்றழைக்கப்படுகிறது. இந்த செல்களில், மிளகில் உள்ள, கெப்செசின் செயல்பட்டு புற்றுநோய் கட்டிகளை எதிர்க்கும் காரணிகளை உருவாக்குகிறது. எலிகளிடையே செய்யப்பட்ட பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. எதிர்காலத்தில், டி.ஆர்பி., மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர்