மூத்தமகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இளையமகனை பிடித்து சித்திரவதை செய்தது | தாய் சாட்சியம்மூத்தமகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இளையமகனை பிடித்து சித்திரவதை செய்தது | தாய் சாட்சியம்

sfv

 

எனது 14 வயது மகனை வீட்டில் வைத்து வெள்ளை வானில் கடத்தியவர்கள்  என்னிடம் 20 இலட்சம் ரூபா தருமாறும் இல்லையேல் மகனை சுட்டு பிணமாக வீட்டில் போடுவோம் என்று தொலைபேசியில் சிங்களத்தில் ஒருவர் கேட்டார். அவ்வளவு பணம் எம்மிடம் இல்லை என்று கூறிய சில நாட்களில் 10 வயதுடைய எனது இரண்டாவது மகனும் வீதியில் வைத்து கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார் என தாய் ஒருவர் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளித்தார். மடு பிரதேச செயலகத்தில்  தற்போது நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவின் போது தாய் ஒருவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில், 04.04.2008 ஆம் ஆண்டு அன்று இரவு வீட்டில் இருந்த 14 வயது மகனை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றுவிட்டனர். நாங்கள்  உடனடியாக இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள இராணுவத்திடம் கேட்டோம்  . ஆனால் அவர்கள்  தாம் பிடிக்கவில்லை என்று கூறினார்கள். பின்னர்  3 நாட்களுக்கு பின்னர் 20  இலட்சம்  தந்தால் மகனை விடுதலை செய்வோம் என்றும் இல்லையேல் மகனை பிணமாக வீட்டில் கொண்டுவந்து போடுவோம் என்றும் சிங்களத்தில் கூறினர். எங்களுக்கு சிங்களம் தெரியாது பக்கத்தில் உள்ள வீட்டில் தான்  கொண்டு போய் கொடுத்து விபரத்தை கேட்டோம். அதற்கு எங்களால் முடியாது என்றும் சுட்டுக் கொண்டு வந்து போடுமாறும் கூறினோம்.

அதன்பின்னர் சில நாட்களில் எனது 10 வயது மகன் வீதியால் வந்து கொண்டிருக்கும் போது இராணுவ ரக்கில் வந்தவர்களால் எனது மகன் கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டார். மாலை 4 மணியாகியும் வீட்டுக்கு வராதமையால் இலுப்பைகுளத்தில் உள்ள இராணுவ முகாமில் சென்று கேட்கும் போது தாங்கள் பிடிக்கவில்லை என்று கூறி அனுப்பினர். தொடர்ந்தும்  நாங்கள்  குறித்த முகாமிற்கு சென்று கேட்கும் போது பிடித்தவரை அடையாளம் காட்டுமாறு கூறினர். அப்போது நாங்கள்  ஒருவரை காட்டினோம். பின்னர் 6 நாட்களின் பின்னர் 10 வயது மகன் கண்கட்டப்பட்ட நிலையில் கை, முகம் போன்ற இடங்களில் பிளேட்ரால் வெட்டி காயப்படுத்தி சித்திரவதை செய்த பின்னர் வீதியில் இறக்கிவிட்டிட்டு போய்விட்டனர்.

அந்தவேளை அண்ணாவை இராணுவம் சுட்டுவிட்டதாக தன்னை வைத்திருந்த முகாமில் கூறினர் என்றும் தன்னை சித்திரவதை செய்தனர் என்றும்  எங்களிடம் கூறினார். ஆனால் எனது மூத்த மகன்  குறித்து எதுவும் தெரியாது . ஆனால் இராணுவம் கடத்தியது என்று நான் உறுதியாக கூறுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்

ஆசிரியர்