பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம்  அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு இடம்பெற்;ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

எந்த வித நிபந்தனைகளையும் விதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும்  இரு தரப்பிற்கும் இடையில் கைச்சாத்;திப்படவுள்ள உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்தில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.