தமிழ் மக்கள் 98 வீத­மாக வாக்­க­ளித்தால் எமது தேவைகள் நிறை­வேற்­றப்­படும். இந்த ஜனா­தி­பதி தேர்­தலும் தமி­ழர்­களின் போராட்­டத்தின் இன்னும் ஒரு அடி. அவ்­வா­றுதான் நாங்கள் பார்க்­கின்றோம். எதிர் கொள்­ளு­கின்றோம்.பல­ருடன் பேசி­யுள்ளோம். அதை கூற நான் விரும்­ப­வில்லை. அதி­உச்ச அதி­கார பகிர்­வுடன் கூடிய ஒரு தீர்வை நாங்கள் பெறுவோம். தமிழ் மக்கள் பாது­காப்­பாக, சகல உரி­மை­க­ளையும் பெற்று, கௌர­வத்­து­டனும், சுய மரி­யா­தை­யு­டனும் வாழ உரிய தீர்­வினை பெறுவோம். இதற்­கான கணி­ச­மான தூரம் நாங்கள் பய­ணித்­து­விட்டோம். அதை பெற்றுக் கொள்ளும் வாசலில் நாங்கள் நிற்­கின்றோம். இதற்­காக உறு­தி­யாக ஒற்­று­மை­யாக நிற்க வேண்டும் என தமிழ் தேசியக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அமரர் நட­ராஜா ரவி­ராஜின்  நினை­வுப்­பே­ருரை நேற்­று­ முன்­தினம் தென்­ம­ராட்சி கலா­சார மண்ட­பத்தில் இடம்­பெற்­ற­போது அதில் கலந்­து­கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

உரையின் முழு விபரம் வரு­மாறு:

ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் 16 ஆம் திகதி நடை­பெ­றப்­போ­கின்­றது. 35 பேர் போட்­டி­யி­டு­கின்­றார்கள். போட்டி முக்­கி­ய­மாக இரண்­டு­பே­ருக்கு இடையில் நில­வு­கின்­றது. புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்தபாய ராஜ­பக்­ ஷவுக்கும் இடை­யி­லேயே இந்த போட்டி நடக்­கின்­றது.

இவர்­களின் ஒரு­வர்தான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டலாம். ஜனா­தி­பதி தேர்­தலில் நாங்கள் பங்­கு­பற்­று­வதா இல்­லையா? என்­பது முதல் கேள்வி. இது தொடர்பில் சில கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

2005 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் வட,கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பங்கு கொள்­ள­வில்லை. இத­னால்தான் மஹிந்த ராஜ­பக்­ ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டார். அவ­ரு­டைய ஆட்­சியின் கீழ் 2005 தொடக்கம் 2015 ஆம் ஆண்­டுக்கும் இடையில் நடை­பெற்ற சம்­ப­வங்­களை பற்­றியும், அதனால் மக்கள் அனு­ப­வித்த துன்­பங்கள் துய­ரங்­களை பற்றி நான் கூற வேண்டி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை.

அந்த தேர்­தலில் தமிழ் மக்கள் பங்­கெ­டுத்து, சிந்­தித்து வாக்­க­ளித்­தி­ருந்தால் அந்த நிலமை ஏற்­பட்­டி­ருக்க வேண்டி அவ­சியம் இல்லை.

ஜனா­தி­பதி பதவி சாதா­ர­ண­மான பதவி இல்லை. அதி­யுச்ச நிர்­வாக அதி­காரம் அவ­ரி­டம்தான் உள்­ளது. அரசின் தலைவர். அமைச்சின் தலைவர். எவ்­வா­றான அமைச்சு இருக்க வேண்டும் என்றும், எந்த அமைச்­சுக்கு எந்த கரு­மங்கள் கொடுக்­கப்­பட வேண்டும் என்று தீர்­மா­னிப்­பவர் அவர். நீதி­மன்­றங்­க­ளாக இருக்­கலாம், பொதுச் சேவை, பொலிஸ் சேவை, இரா­ணுவ சேவை தொடர்பில் நிய­ம­னங்­களை ஜனா­தி­ப­திதான் செய்வார்.

இவ்­வா­றான அதி­உச்ச அதி­காரம் கொண்­டவர் யாராக இருக்க வேண்டும் என்­பதை தெரிவு செய்ய வேண்­டிய பங்கு எங்­க­ளிடம் உள்­ளது.

சஜித் பிரே­ம­தா­சவும் கோத்தபாய ராஜ­பக்­ ஷவும் ஆட்சிப் பொறுப்­புக்­களில் இருந்­தி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் சரித்­திர கோவை எங்­க­ளிடம் உள்­ளது. நடை­பெற்ற அசம்­பா­வி­தங்கள், மனித உரிமை மீறல்கள், அடிப்­படை உரிமை மீறல்கள், கொலைகள், காணாமல் போனவை போன்ற மக்கள் அடைந்த துன்­பங்கள், துய­ரங்கள் அனைத்தும் எமக்கு தெரியும்.

இவற்­றுக்­கொல்லாம் யார் பொறுப்­பா­ளிகள் என்றும் எமக்கு தெரியும். எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் யோசப் பர­ரா­ஜ­சிங்கம், ரவிராஜ் ஆகிய இருவர் கொலை செய்­யப்­பட்­டார்கள். யார் கொலை செய்­தார்கள் என்று எவ­ருக்கும் தெரி­யாது.

மாண­வர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், மனித உரி­மைக்­காக உழைத்­த­வர்கள், சாதா­ரண பிர­ஜைகள் கொலை செய்­யப்­பட்­டார்கள்.

இவ்­வா­றான ஒரு ஆட்சி மீண்டும் ஏற்பட நாம் இடம் கொடுக்கப் போகின்­றோமா? அவ்­வா­றான ஒரு பாத­க­மான நிலை மீண்டும் உரு­வாக சந்­தர்ப்பம் உள்ள போது, அதனை தடுப்­ப­தற்­கான பங்­க­ளிப்பு எங்­க­ளுக்கு இல்­லையா?

சஜித் பிரே­ம­தா­சவை பொறுத்­த­வ­ரையில் அவரை ஒரு துவே­ச­வா­தி­யாக நான் கரு­த­வில்லை. அவரை நீண்ட கால­மாக எமக்கு தெரியும். அவ­ரு­டைய தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் எல்லா மக்­க­ளையும் ஒற்­று­மைப்­ப­டுத்தி அந்த ஒற்­று­மையின் அடிப்­ப­டையில் நாடு முன்­னேற்­ற­ம­டைந்து, மக்கள் அனை­வரும் சமத்­து­வ­மாக வாழ வேண்டும் என்­பது தனது திட­மான நிலைப்­பாடு என்று கூறி­யுள்ளார்.

அதி­யுச்ச அதி­கார பகிர்வு வழங்­கப்­பட வேண்டும். அதற்கு தான் தயா­ராக உள்ளார் என்றும் கூறி­யுள்ளார். இதனை பற்றி நான் அதிகம் பேச­வில்லை. அவ்­வாறு நான் பேசினால் அந்த கருத்­துக்கள் தென்­ப­கு­தியில் தப்­பான விதத்தில் பிர­சாரம் மேற்­கொள்­ளப்­ப­டலாம்.

கோத்­தாவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அதி­கார பகிர்வு தொடர்பில் எவையும் கூறப்­ப­ட­வில்லை. தாங்கள் செய்த தவ­று­களை தயவு செய்து மன்­னித்துக் கொள்­ளுங்கள். இனிமேல் அவ்­வா­றான தவ­றுகள் நடக்­காது என்றும் கூற­வில்லை.

அவர்கள் கூறு­கின்­றார்கள் நடந்­ததை மறந்­து­விட்டு வாருங்கள் நாங்கள் ஒன்றாய் கூடி ஒரு பய­ணத்தை செய்வோம் என்று. எங்கே கூட்டிக் கொண்டு போகப் போகின்­றாரோ தெரி­ய­வில்லை.

கடந்த கால நிலைப்­பாடு, அவர்­களின் சரித்­திர கோவை, அவர்­களின் தேர்தல் விஞ்­ஞா­பனம் என்­ப­வற்றை பார்த்தால் நாங்கள் ஒரு முடிவை எடுக்­கலாம்.

இப்­போது கூறு­கின்­றார்­களாம் தமக்கு சிறு­பான்மை இனத்­த­வர்­களின் வாக்­குகள் தேவை இல்லை. பெரும்­பான்மை இனத்­த­வர்­களின் வாக்­கு­களால் மட்டும் தாங்கள் வெல்வோம் என்று. உண்­மை­யி­லேயே அவ்­வாறு கூறி­னார்­களோ எனக்கு தெரி­ய­வில்லை. ஏலும் என்றால் செய்­யுங்கள். பெரும்­பான்மை இனத்­த­வரின் வாக்­கு­களை மட்டும் வைத்து வெல்­லுங்கள்.

எம்மை மிரட்டி, எம்மை அதட்டி நீங்கள் எத­னையும் அடைய முடி­யாது. அதனை அடை­வ­தற்கு நாங்கள் இட­ம­ளிக்க மாட்டோம்.

தம்பி சிவா­ஜி­லிங்­கத்­திற்கு என்னை நன்­றாக தெரியும். அவ­ரையும் நான் நன்­றாக அறிந்­தவன். அந்த வகை­யில அவ­ரிடம் நான் அன்­பாக கேட்டுக் கொள்­ளு­கின்றேன் ஜனா­தி­பதி தேர்­தலில் இருந்து வில­கு­மாறு.

என்­னு­டைய கோரிக்­கையை அவர் தவ­றாக புரிந்து கொள்ள மாட்டார்.

தாங்கள் எல்­லோரும் ஒரு­மித்து ஒற்­று­மை­யாக எமது தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் யாரு­டைய வெற்றி எமக்கு பாத­க­மில்­லா­மலும், எமக்கு சாத­க­மா­ன­து­மாக இருக்­கும்­என்று சிந்­தித்து பார்த்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அன்­பா­கவும் தாழ்­மை­யா­கவும் கூறிக் கொள்ள விரும்­பு­கின்றேன்.

முன்னர் பத­வியில் இருந்து, இப்­போது பதவி இல்­லாமல் உள்ள தமிழ் அர­சியல் வாதிகள் கூறு­கின்­றார்கள்

பத­வியை எவ்­வி­தத்­திலும் பெற்­று­விட வேண்டும் என்று நினைப்ப­வர்கள்.

நாங்கள் கடும் போக்குவாதிகள் இல்லை. சமா­தா­ன­மாக பேசி பெறக்­கூ­டி­யதை பெற்று வெல்லப் போகும் கோத்­தா­விற்கு ஆத­ரவு கொடுக்­கு­மாறு கோரு­கின்­றார்கள். நாங்கள் பிச்சை வேண்­டு­ப­வர்கள் இல்லை.

தந்தை செல்­வாவால் தமி­ழ­ரசு கட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட போது பிச்சை வாங்­கு­வ­தற்­காக கட்சி ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. எமது இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்தி போரா­டிய போது பிச்சை வாங்­கு­வ­தற்­காக போரா­ட­வில்லை. இதை அனை­வரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்­க­ளுக்கு பத­விகள் வேண்­டு­மென்­றால்­நீங்கள் பத­வி­களை பெற்றுக் கொள்­ளுங்கள். தமிழ் மக்­களை விற்று பத­வி­களை பெற வேண்டாம். அதற்கு உங்­க­ளுக்கு உரித்து இல்லை.

தமிழ் மக்கள் 98 வீதமாக வாக்களித்தால் எமது தேவைகள் நிறைவேற்றப்படும். இந்த ஜனாதிபதி தேர்தலும் தமிழர்களின் போராட்டத்தின் இன்னும் ஒரு அடி. அவ்வாறுதான் நாங்கள் பார்க்கின்றோம். எதிர் கொள்ளுகின்றோம்.

தமிழ் மக்கள் பாதுகாப்பாக, சகல உரிமைகளையும் பெற்று, கௌரவத்துடனும், சுய மரியாதையுடனும் வாழ உரிய தீர்வினை பெறுவோம். இதற்கான கணிசமான தூரம் நாங்கள் பயணித்துவிட்டோம். அதை பெற்றுக் கொள்ளும் வாசலில் நாங்கள் நிற்கின்றோம். இதற்காக உறுதியாக ஒன்றுமையாக நிற்க வேண்டும்.

– தி.சோபிதன் –