செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யாழில் கொரோனா சந்தேகத்தில் 24 மணிநேரத்தில் 7 பேர் அனுமதி!

யாழில் கொரோனா சந்தேகத்தில் 24 மணிநேரத்தில் 7 பேர் அனுமதி!

1 minutes read

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸார், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய், தாவடியைச் சேர்ந்த பெண், ஆனைக்கோட்டை, உரும்பிராய், மன்னாரைச் சேர்ந்த 4 பேரே இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலிருந்து இவர்களது மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தலுக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் என்று தெரியவருகின்றது.

தாவடியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் வசித்த பெண் ஒருவரே கொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நபர், நெடுந்தீவுக்கு வெளிநாட்டவர்களுடன் சென்று வந்த நிலையில் அவரும் கொரோனா தொற்றுக்குரிய சந்தேகங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உரும்பிராயைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவரும் கொரோனா தொற்று சந்தேகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மன்னாரைச் சேர்ந்த இருவர் இன்று மாலை கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.