செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நயினை நாகபூசணி அம்மன் திருவிழா இன்று ஆரம்பம்

நயினை நாகபூசணி அம்மன் திருவிழா இன்று ஆரம்பம்

0 minutes read
 

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாள்கள் இடம்பெறவுள்ளது.

நயினாதீவு பகுதியிலுள்ள 30 அடியவர்கள் மட்டும் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம். அதேவேளை மகோற்சவ காலத்தில் அன்னதானம் வழங்குவதற்கும் சுகாதாரப் பிரிவினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து எவரும் ஆலயத் திருவிழாவில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருப்பவர்களும் கலந்து கொள்ள முடியாது.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு இம்முறை நயினாதீவு ஆலய உற்சவத்திற்கு வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் குறித்த ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதேவேளை தேர், சப்பற திருவிழாக்கள் எதுவும் இடம்பெறமாட்டாது. ஆலய உற்சவங்கள் அனைத்தும் உள்வீதி உடனேயே நிறைவுபெறவுள்ளது – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.