May 31, 2023 5:53 pm

முன்னாள் போராளிகள் வடக்கு, கிழக்கில் நிர்க்கதி! – சம்பிக்க கவலை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 ஆயிரத்து 600 விடுதலைப்புலி உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கில் நிர்க்கதியாகி இருக்கின்றார்கள் என்று 43 ஆம் படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பல்வேறுபட்ட தொழில் அனுபவம் உள்ள அவர்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் சம்பிக்க வலியுறுத்தினார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் வழங்கிய பேட்டியிலேயே அவர் கூறினார்.

‘நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நீங்கள் கூறும் யோசனை என்ன?’ என்ற கேள்விக்கு அவர் வழங்கிய பதில் வருமாறு:-

“இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குப் படையினரைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்காகக் குழி வெட்டுவதற்கும் – வெள்ளாமை வெட்டுவதற்கும் – வீதியைத் துப்புரவு செய்வதற்கும் அவர்களைப் பாவிப்பது அல்ல.

நிறுவன ரீதியான செயற்பாட்டில் படையினரை ஈடுபடுத்த வேண்டும். சீனாவில் அவ்வாறு செய்தார்கள். உலகின் பல
நாடுகளில் செய்துள்ளார்கள். உலகின் முதலிடத்தில் இருக்கும் Huawei நிறுவனத்தை இயக்குவது படையினர்தான். இலங்கையில் துட்டகைமுனு மன்னன்கூட அவ்வாறு செய்திருக்கின்றார்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களைக்கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 ஆயிரத்து 600 விடுதலைப்புலி உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கில் நிர்க்கதியாகி இருக்கின்றார்கள். அவர்களிடம் பல்வேறுபட்ட தொழில் அனுபவம் உள்ளது. அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

அப்படிப் பயன்படுத்தாமல் போனால் அவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்திலும் பாதாள உலகச் செயற்பாட்டிலும் ஈடுபடுவார்கள்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்