செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இலங்கை அணியின் ஆலோச பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன

இலங்கை அணியின் ஆலோச பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன

1 minutes read

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ICC ஆடவர் ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோச பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன இணையவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இன்று (15) பிற்பகல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை அணி எதிர்வரும் ஒக்டோபர் 02 ஆம் திகதி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா புறப்படவுள்ளதாக தெரிவித்த அவர், ஒக்டோபர் 06ஆம் திகதி இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியுடன் மஹேல ஜயவர்தன அவுஸ்திரேலியாவில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித் அவர், தொடர் நிறைவடையும் வரை மஹேல ஜயவர்தன அணியுடன் இணைந்திருப்பார் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மஹேல ஜயவர்தனவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர்களுக்குச் சொந்தமான 3 அணிகளுக்கும் ‘Global Head of Performance’ (வெளிப்பாடு தொடர்பான உலகளாவிய தலைவர்) எனும் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.