செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தேநீர் குடிக்கும் அளவை குறைக்க மக்களிடம் பாகிஸ்தான் கோரிக்கை

தேநீர் குடிக்கும் அளவை குறைக்க மக்களிடம் பாகிஸ்தான் கோரிக்கை

0 minutes read

நாட்டில் பொருளாதாரத்தை நிலையாக பேண, தேநீர் குடிக்கும் அளவை குறைத்துக்கொள்ளும்படி நாட்டு மக்களிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையான கோப்பைகளை குடிப்பது அதிக இறக்குமதிச் செலவை குறைக்கும் என்று சிரேஷ்ட அமைச்சரான அஹ்ஸன் இக்பால் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைவாகக் காணப்படுகிறது. அனைத்து இறக்குமதிகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு குறைவான காலத்திற்கே அந்நியச் செலாவணி உள்ளது.

உலகின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதி நாடாக இருக்கும் பாகிஸ்தான் கடந்த ஆண்டில் 600 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான தேயிலையை வாங்கியுள்ளது.

“தேயிலையை நாம் கடனாக இறக்குமதி செய்வதால் தேநீர் அருந்துவதை ஒன்று, இரண்டு கோப்பைகளுக்குக் குறைத்துக்கொள்ளும்படி நாட்டு மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று இக்பால் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.