செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சீனாவில் கடும் வரட்சி

சீனாவில் கடும் வரட்சி

0 minutes read

சீனாவில் ஏற்பட்டுள்ள வரட்சி அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் கடும் வெப்பம் சுட்டெரிக்கிறது. தினசரி பயன்பாட்டுக்குத் தேவைப்படும் தண்ணீரை உள்ளூர்க் குடியிருப்பாளர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க அதிகாரிகள் திணறுகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் வரட்சி ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே சீனாவின் வடிகால் வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர். நீர் வளங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குச் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் இலையுதிர் காலத்தின் விளைச்சல் இம்முறை கடுமையாகப் பாதிப்படையக்கூடும் என்று சீனா எச்சரித்துள்ளது. கடும் வெப்பத்தால் 3 மில்லியன் ஹெக்டருக்கும் அதிகமான விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இப்போதே அறுவடை செய்து நெல்லைச் சேமித்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வரும் மாதங்களில் அரிசி விளைச்சலைப் பாதுகாக்க, அதிகாரிகள் கிட்டத்தட்ட 1.5 பில்லியன் டொலரை ஒதுக்க உறுதியளித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.