செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 9 கொலம்பிய இராணுவ வீரர்கள் மரணம்

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 9 கொலம்பிய இராணுவ வீரர்கள் மரணம்

1 minutes read

கொலம்பியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள், இராணுவ தளம் மீது நடத்திய தாக்குதலில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலம்பிய அரசாங்கத்துக்கு எதிராக தேசிய விடுதலை இராணுவ கொரில்லாக்கள் என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அவர்களுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் கொலம்பிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கில் எல் கார்மன் என்ற பகுதியில் அமைந்து உள்ள இராணுவ தளம் மீது இந்தப் கொரில்லா குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 9 இராணுவ வீரர்கள் மரணம் அடைந்ததுடன், மேலும் 9 வீரர்கள் காயமடைந்தனர்.

இதனை கொலம்பிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வீரர்கள் நார்தே டி சான்டாண்டர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து சம்பவ பகுதியில் நிலைமையை ஆய்வு செய்ய கொலம்பிய தேசிய இராணுவ தளபதி ஜெனரல் லூயிஸ் மொரீசியோ ஆஸ்பினா அங்கு சென்றுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கொலம்பிய ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.