அமெரிக்காவின் கனெட்டிகட் (Connecticut) மாநிலத்தில் கண் நுண்கிருமி பரவியதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நுண்கிருமி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்திலிருந்து பரவியுள்ளதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த கண் நுண்கிருமி, மனிதர்களிடையே ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுவதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களில் மூவர் மரணித்துள்ளதாகவும் 8 பேருக்குக் கண்பார்வை பறிபோனதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 50,000 கண் சொட்டு மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டன. இந்தியாவில் அந்தச் சொட்டு மருந்தின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்து கண் சொட்டு மருந்துத் தயாரிப்பாளர்கள் மீது இந்தியா நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.