December 2, 2023 9:59 pm

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை; பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை!

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

இந்த சட்டம், சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேறியது. இது ஏற்கெனவே மேலவையால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது போக்குவரத்து, சாலைகளில் நடந்து செல்லும்போது என, அனைத்து பொது இடங்களிலும் புர்கா அணியத் தடை விதிக்கப்படும்.

எனினும், மத வழிபாட்டுத் தலங்களில் புர்கா அணிய தடை விதிக்கப்படாது எனக் கூறப்படுகிறது.

தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்