செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ராட்சச முதலை வாயில் மனித உடல்: சுட்டு கொன்ற அதிகாரிகள்

ராட்சச முதலை வாயில் மனித உடல்: சுட்டு கொன்ற அதிகாரிகள்

1 minutes read

அமெரிக்காவின் புளோரிடாவின் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி.

இப்பகுதியின் ஷெரீப் அலுவலகத்திற்கு அங்குள்ள நீர்நிலை ஒன்றில் ஒரு உடல் தென்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அதிகாரிகள் களத்திற்கு சென்றனர்.

சம்பவ இடமான ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் உள்ள நீர்நிலையில் ஒரு 13-அடி நீள முதலை தென்பட்டது. அதன் வாயில் ஒரு மனித உடலின் பாகம் தெரிந்தது.

இதனையடுத்து ஷெரீப் உத்தரவின் பேரில் அந்த முதலை சுடப்பட்டது. அதிகாரிகள் அதன் வாயிலிருந்த மனித உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்திரமாக வெளியில் எடுத்தனர்.

விசாரணையில், இறந்தது 41 வயதான சப்ரீனா பெக்காம் எனும் பெண்மணி என தெரிய வந்துள்ளது.

இந்த நடவடிக்கையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

“இவ்வளவு நீளமுள்ள ஒரு ராட்சச முதலை இங்குள்ள ஏரியில் இருக்கலாம் என நினைத்து கூட பார்த்ததில்லை” என இச்சம்பவம் குறித்து அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.