செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்டேன் | எலான் மஸ்க்

கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்டேன் | எலான் மஸ்க்

1 minutes read

கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு தொடர்பில் எலான் மஸ்க்கின் கருத்து சிலவற்றை எலான் கூறியுள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் ஒரு பயனர் கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் சில நாடுகள் அதனை உபயோகிப்பதையே நிறுத்தி விட்டதாகவும்  கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிலளித்த எக்ஸ் நிறுவனத்தின் அதிபரும், உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது: மக்கள் கட்டாயமாக தடுப்பூசிகளையும் பூஸ்டர்களையும் செலுத்தி கொள்ள வேண்டும் என அரசாங்கங்கள் கட்டாயபடுத்தியதை நான் நாகரிகமற்ற அத்துமீறலாக கருதுகிறேன்.

அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பதால் ஒரு நல்ல ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக நானே சிறைக்கு சென்றிருப்பேன்.

அது மட்டுமல்ல; நானும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டேன். நோயினால் ஏற்பட்ட உடல்ரீதியான சிக்கலை விட தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு பலருக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன.

நோய் தடுப்புக்கான தடுப்பூசி, நோயை விட கடுமையான விளைவுகளை தர கூடாது. இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.