December 8, 2023 5:45 pm

கடலுக்குள் விழுந்த சொகுசுக் கப்பல் ஊழியரை தேடும் பணி தீவிரம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Sea

இங்கிலாந்தின் கென்ட் கரைக்கு அப்பால் சொகுசுக் கப்பலிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்ததாக சந்தேகிக்கப்படும் ஆண் ஊழியரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.

ஜெர்மானியக் கப்பல் AIDAperlaவிலிருந்து ஊழியர் ஒருவர் காணாமல் போனதாகக் கடலோரக் காவற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தேடல், மீட்பு ஹெலிகாப்டர், விமானம் மற்றும் உயிர்காப்புப் படகுகள் அனுப்பப்பட்டன.

கப்பல் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரிலிருந்து கெனரி தீவுகளின் லாஸ் பாமாஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்ததாகச் சொகுசு கப்பல் நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், ஊழியரைக் காணவில்லை என்று அறிந்ததும் கப்பல் அதன் பயணத்தை நிறுத்திவிட்டு, ஊழியர் விழுந்ததாக நம்பப்படும் இடத்துக்குத் திரும்பியதாகவும் BBC செய்தி வெளியிட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்