December 10, 2023 1:26 am

டைட்டானிக் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியல் ஏலத்தில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
டைட்டானிக் கப்பல் மெனு கார்ட்

1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது.

இதில் அக்கப்பலில் பயணித்த 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆய்வுகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக அந்த கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் ஏலத்திற்கு வரவுள்ளது.

இது தொடர்பாக ஏலதாரரான ஆன்ட்ரூ ஆல்ட்ரிச் கூறுகையில், டைட்டானிக் கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை (மெனு கார்ட்) வைத்திருந்தார்.

இது அவரது குடும்பத்தினர் உள்பட யாருக்கும் தெரியாது. 2017ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு அவரது உடமைகளை அவரின் மகளும், மருமகளும் பார்த்தனர்.

அப்போது தான் இந்த டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட மெனுவை பழைய புகைப்பட ஆல்பத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர் என்றார்.

விரைவில் ஏலத்திற்கு வர உள்ள அந்த மெனு கார்டில் மாட்டிறைச்சி உள்ளிட்ட பல உயர்தர உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ‘மெனு கார்டு’ ஆரம்ப தொகையாக 60 ஆயிரம் யூரோவுக்கு ஏலம் விடப்படவுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்