அமெரிக்காவின் தென் கிழக்கு மாநிலங்களில் Helene (ஹெலீன்) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோர் தொகை 93ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அதிகமான உடல்கள் மீட்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடற்கரையில் குவிந்துள்ள நாற்காலிகள் உள்ளிட்ட குப்பைகள் மற்றும் நகருக்குள் குவிந்துள்ள படகுகள் என அனைத்தையும் துப்புரவு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புளோரிடா, ஜார்ஜியா, நார்த் கரோலைனா, சௌத் கரோலைனா மற்றும் டென்னசி உள்ளிட்ட சில மாநிலங்களில் Helene சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் இரண்டே கால் மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தற்காலிகத் தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பார்வையிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.